-->

Saturday, December 3, 2011

அவ்வாறு வரும் லிங்கின் உள்ள கண்ணை கவரும் படமும் ஏமாற்றும் வசனங்களும் இது .

நண்பர்கள் கவனத்திற்கு ,, 
தற்போது facebook இல் புதிய வைரஸ் பரவுகிறது .
அதாவது நீங்கள் யாருடனாவது chat பண்ணும் போது அவர்கள் அனுப்புவது போல் ஒரு லிங்க் வரும் அந்த லிங்கை கிளிக் செய்தாள் ஒரு டவுன்லோட் பட்டன் வரும் . அதை பார்க்கும் போது ஒரு picture போலவே தோன்றும் உடனே நீங்கள் என்ன picture எண்டு பர்க்க டவுன்லோட் பட்டனை அலுதுவீர்கள் அவளவுதான் உங்கள் கணணி சரி உங்கள் கணனிக்கு வைரஸ் பரவிவிடும் 
தஜவு செய்து அந்த லிங்கை கிளிக் செய்யாதீர்கள் .
அப்போது லிங்க் தனிய வராது அவர்கள் அனுப்புவது போல முன்னால் சின்ன வசனம் வரும் இதற்கான காரணம்" நாம் நினைப்போம் அவர்கள் தானே எதோ லிங்க் அனுபிரர்கள் என்று "
எனவே facebook கை பாவனை செய்வோரே
chat மூலம் எதாவது லிங்க் வருமாக இருப்பின் முதலில் அதை உறுதி செய்தபின் கிளிக் செய்யவும்...
அப்படி வரும் லிங்க்
omg vv http://www.nomanslands.com/users/dn3.htm?4b5c8u3-Picture51.JPG
omfg lol sk http://www.nomanslands.com/users/dn3.htm?8c1p1q1-Picture21.JPG
haha mr http://www.nomanslands.com/users/dn3.htm?6g1w6r3-Picture16.JPG
இவ்வாறு பலவிதமாக வரும் .
<எனக்கு இவ்வாறு பல தடவை வந்தது நான் கிளிக் செய்து டவன்லோடும் செய்தனான் அதனால் தான் இவ்வாறு ஒரு பதிப்பை இடுகிறேன் .
by:- sas subakeethan



Friday, November 25, 2011

கடவுலே??

கடவுள்:- பக்தா,  உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் 
பக்தன் :-எனக்கு சொர்கதிட்கு ரோடு போட்டுத்தா ...
கடவுள்:-மன்னிக்கவும் அது முடியாது 
பக்தன் :-அப்ப, என்னை ஒரு பொண்ணு, உண்மஜா காதலிக்க வை 
 கடவுள்:-பக்தா ... உனக்கு சிமென்ட் ரோடு வேணுமா? அல்லது தார் ரோடு வேணுமா? 



Tuesday, November 22, 2011

இணையத்தில் குழந்தைகளை பாதுகாப்பதற்கு இன்றைய உலகில் கற்றுக் கொள்வதற்கும் அறிவுத் தேடலுக்கும் முதல் தேவை இணைய இணைப்பும், இணையத் தேடலும் தான். இதில் அபாயம் தரும் இன்னொரு பக்கமும் உள்ளது. முற்றிலும் கட்டற்ற இணையம் சிறுவர்களுக்கு அபாயகரமானது. பாலியல் தளங்களும், வன்முறையை போதிக்கும் தளங்களும் இணையத்தில் நிறைந்து கிடக்கின்றன. இவற்றைப் பார்க்காதே என்று ஒரு காவலாளி போல சிறுவர்களை எந்நேரமும் கட்டுப்படுத்துவது இயலாது. மேலும் வரையறைகளை அமைப்பது இன்றைய டிஜிட்டல் உலகில் பெற்றோர்களுக்கும் சற்று சிரமமான செயல்பாடாக உள்ளது. இயலாததும் கூட. பெற்றோர் தடை இடுகையில் அதனை மீற வேண்டும் என்ற இயல்பு சிறுவர்களுக்கு இயல்பாகவே தோன்றுவது இயற்கையே. இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க K9 Web Protection என்னும் புரோகிராம் நமக்கு உதவுகிறது. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராம், வீடுகளில் பயன்படுத்தும் கணணிகளில் இணையத்தில் பெற்றோர் கட்டுப்பாடு விதிக்க உதவுகிறது. உங்கள் பெர்சனல் கணணிகளில் உள்ள இணையத்தை உங்கள் கட்டுப்பாட்டிலேயே நீங்கள் அருகில் இல்லாத சூழ்நிலையிலும் வைத்திருக்க உதவுகிறது. உங்கள் குழந்தைகளை இணையம் தரும் தீமைகளிலிருந்து பாதுகாக்க உதவிடும் இதன் சிறப்பம்சங்களாவன: 1. பாலியல், போதை மருந்து, தனிநபர் டேட்டிங், வன்முறையைப் போதிப்பது, வெறுப்பினை வளர்ப்பது, இனவேறு பாட்டினைத் தூண்டுவது என 70க்கும் மேற்பட்ட பல்வேறு பிரிவுகளாக இணைய தளங்களைப் பிரித்து வைத்து தடுக்கலாம். 2. குழந்தைகளின் வயதின் அடிப்படையில் தடுப்பு நிலைகளை அமைக்கலாம். 3. அனைத்து தேடல் சாதனங்களிலும் SafeSearch என்ற ஒன்றை இயக்கி வைக்கலாம். 4. குறிப்பிட்ட நேரத்தில் இணையத் தொடர்பினை ஏற்படுத்த இயலாமல் செட் செய்திடலாம். 5. எப்போதும் அனுமதி மற்றும் எப்போதும் தடை செய்திடு என இருவகைகளாக இணையதளங்களைப் பிரித்து அமைக்கலாம். 6. பெற்றோர் அமைத்திடும் கடவுச்சொல், மற்ற கடவுச்சொற்களையும் மீறி இருக்கும் வகையில் அமைக்கலாம். 7. கணணி தொழில்நுட்பம் சற்று அதிகம் தெரிந்து பயன்படுத்துபவர்கள் கூட மீட்டெடுக்க முடியாத தடைகளை உருவாக்கலாம். 8. தடை செய்யப்பட்ட தளங்களைப் பார்த்தால் அது குறித்த அறிக்கை தரும்படி அமைத்திடலாம். 8. விண்டோஸ் மட்டுமின்றி மேக் கணணிகளிலும் இயங்கும் வகையிலும் இது தரப்படுகிறது. K9 Web Protection என்ற இந்த புரோகிராம், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் எக்ஸ்பி, மேக் ஓ.எஸ். எக்ஸ் 10.4.7 மற்றும் அதற்கும் மேற்பட்ட சிஸ்டங்களில் இயங்குகிறது. இதனை தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில் லைசன்ஸ் கீ தரும்படி இந்த புரோகிராம் கேட்கும். லைசன்ஸ் கீயினை இலவசமாக http://www1.k9webprotection.com/ என்ற முகவரியில் உள்ள இணையதளத்தில் பெற்றுக் கொண்டு பயன்படுத்தலாம். இதே இணைய பாதுகாப்பு ஐ-போன், ஐ-பாட் டச் மற்றும் ஐ-பேட் ஆகிய சாதனங்களில் பயன்படுத்தும் வகைகளிலும் கிடைக்கிறது. இவற்றிற்கான அப்ளிகேஷன் ஸ்டோர்களில் k9 என டைப் செய்து தேடிப் பார்த்து தரவிறக்கம் செய்து நிறுவச் செய்திடலாம்

Friday, November 11, 2011

எரியும் இதயம்
பூங்காவில் மாமிச நாற்றம் காதலர்கள் பேசிக் கொள்கிறார்கள் ஏதோ ஓர் இதயம் எரிகிறதென்று

Thursday, November 10, 2011

தலைமுடி ...! உயரத்தில் இவன் குடியிருப்பு , உதிர்ந்தபின் இல்லை மதிப்பு , தலையில் இருக்கும் வரை அப்படி ஒரு கவனிப்பு , தவறி உணவில் விழுந்தால் அப்பப்பா ! என்ன ஒரு சலிப்பு ...!! இவனுக்கு இல்லை மறுபிறப்பு ..! இன்றுவரை யாரும் முடிக்கவில்லை இவர்களின் கணக்கெடுப்பு ..!! உள்ளவரை தலைக்கு அழகான கரும்பொன் காப்பு ...!!! உலர்ந்து உதிர்ந்தபின் மனிதன் உள்ளாகிறான் பரிகாசிப்புக்கு ..!!!! பெண்ணின் அழகுக்கு வேண்டும் இவன் அருள்பாலிப்பு .! மனமிருந்தால் கொடுக்கலாம் சிறப்பு பாதுகாப்பு .!! மணமில்லை என்பது இவனின் தனிச்சிறப்பு ..!!! இளமையில் இவன் நிறமோ கருப்பு .! நடுதர வயதில் மாற்றங்களால் வரும் வெளுப்பு ..!! இவனை வைத்து கொலையாளியை பிடிக்கலாம் என்பது அறிவியலின் கண்டுபிடிப்பு ..!!! மொத்தத்தில் இவனை பேணிகாப்பது என்பது நம் பொறுப்பு .! இருப்பதை விட்டு இழந்தபின் புலம்புவது என்பது பொறுப்பற்ற பிழைப்பு ..!!

Tuesday, November 8, 2011

தி.மு/////// தி.பி

தி.மு) திருமணத்திற்கு முன் (நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் கீழே படியுங்கள் காதலன் : ஆமாம், இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன். காதலி : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ? காதலன் ; : இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை நினைத்ததில்லை காதலி : நீ என்னை விரும்புகிறாயா ? காதலன்: ஆமாம், இன்றும், என்றென்றும் காதலி : என்னை ஏமாற்றிவிடுவாயா ? காதலன்; : அதைவிட நான் இறப்பதே மேல் காதலி : எனக்கொரு முத்தம் தருவாயா ? காதலன்; : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம் காதலி : என்னை திட்டுவாயா ? காதலன் : ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ? காதலி : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ? (தி.பி) திருமணத்திற்குப் பின் கிழிருந்து பார்க்க...............^

தாய் தந்தை

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள் அவை சூரியச் சந்திரரே
என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள் என் தாயோடு தந்தையரே
அந்த வானின் தீபம் ரெண்டும் இல்லையென்றால்
இந்தமண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாச தீபம் ரெண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய் தந்தை போலே உலகில் உறவில்லையே
தாய் தானே அன்புக்கு ஆதாரம்
தந்தை தானே அறிவுக்கு ஆதாரம்